உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 17, 2026

Hot News

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

காத்தான்குடி மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் மனிதாபிமான செயல்: அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு 50 உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.!!!

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, காத்தான்குடி மாற்றுத்திறனாளிகள் அமைப்பினால், நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக 50 உலர் உணவுப் பொதிகள், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திடம் இன்று (03) ஒப்படைக்கப்பட்டன.

அமைப்பின் தலைவர் எம்.ஐ.எம். இஜாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சம்மேளனத்தின் பதில் தலைவர் எம்.சீ.எம்.ஏ. சத்தார், செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். ரமீஸ் (ஜமாலி), உப செயலாளர் எம்.ஐ.எம். இர்பான் ஆகியோரிடம், இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான ஐம்பது உலர் உணவுப் பொதிகள் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் செயலாளர் ஏ.ஆர். நஸ்லியா, பொருளாளர் எம்.ஜே.எம். ரஸான், முன்னாள் நகரசபை தவிசாளர் மர்சூக் அஹமட் லெப்பை, சம்மேளனத்தின் உப செயலாளர் எம்.ஐ.எம். இர்பான் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.


Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 706020

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time