மட்டக்களப்பில் டிட்வா புயல் பாதிப்பு: விவசாயிகளுக்கான நஷ்டஈடு நடவடிக்கைகள் குறித்து விசேட கலந்துரையாடல்.!!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் டிட்வா புயல் மற்றும் வெள்ளத்தினால் விவசாயத் துறையில் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிடுவதும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (08) புதிய மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், டிட்வா புயலின் தாக்கத்தால் விவசாய நிலங்கள், பயிர்கள் மற்றும் கால்நடை துறை உள்ளிட்ட பல துறைகளில் ஏற்பட்ட சேதங்களை பதிவு செய்து, அதனை சரியான முறையில் கணக்கொடுத்து நஷ்டஈடு வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
இதேவேளை, விவசாயத் துறையுடன் தொடர்புடைய திணைக்களங்கள், அனர்த்தத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான தரவுகளை துரிதமாக சேகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர், திணைக்கள தலைவர்கள், விவசாய, கால்நடை, காணி, நீர்ப்பாசனம் உள்ளிட்ட திணைக்களங்களுக்கான மாவட்ட இணைப்பாளர் கே. திலகநாதன், தொடர்புடைய பணிப்பாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







