புத்தளம் கனமூலைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் விஜயம்: 150 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல்.!!!
(கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்)
புத்தளம், கனமூலை – ஹூதா லங்கா நிறுவனத்தின் அழைப்பின் பேரில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.ஈ. சந்தோஷ் ஜா அவர்கள் செவ்வாய்க்கிழமை (17) கனமூலை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
இவ்விழாவின் போது, பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டு வரும் சுமார் 150 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
மேலும், கனமூலைப் பாடசாலையின் அவசர தேவைகள் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், தேவையான பௌதீக வசதிகள் குறித்து தயாரிக்கப்பட்ட மகஜர் ஒன்றை பாடசாலை அதிபர் பி.எம். முஹ்ஸீன் அவர்கள் உயர்ஸ்தானிகரிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர், ஊர் பிரமுகர்கள், நலன் விரும்பிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.




