உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

இந்திய கடற்படை போர் கப்பல் ‘INS SUKANYA’ இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்.!!!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இந்திய கடற்படையின் போர் கப்பலான ‘INS SUKANYA’ செவ்வாய்க்கிழமை (18) உத்தியோகபூர்வ விஜயத்திற்காக தீவை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் அக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.

இலங்கையை வந்தடைந்துள்ள ‘INS SUKANYA’ என்ற போர் கப்பல் 101 மீட்டர் நீளம் கொண்டதுடன், இந்த போர் கப்பலின் கட்டளை அதிகாரியாக COMMANDER, SANTOSH KUMAR VERMA கடமையாற்றுகின்றார்.
இந்தக் போர் கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான நட்பை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் கப்பலின் அங்கத்துவ குழுவினர் பங்கேற்க உள்ளனர். அத்தோடு இலங்கையின் பல முக்கிய பகுதிகளுக்குச் சென்று பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த உத்தியோகப்பூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, ‘INS SUKANYA’ என்ற போர் கப்பலானது 2025 நவம்பர் 21 ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709334

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time