குருக்கள் மடம் பகுதியில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின்;
தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை – காத்தான்குடியில்.!!!
(எம் எஸ் எம் நூர்தீன்)
மட்டக்களப்பு குருக்கள் மடம் மனித புதைகுழியை தோண்டுவதற்கான அனுமதியை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம் வழங்கியதையடுத்து குருக்கள் மடம் பகுதியில் 12.07.1990 அன்று கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை இன்று (31) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி முகைதீன் மெதத்தைப் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயல் மண்டபத்தில் இடம் பெற்றது
குரல்கள் அமைப்பு காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை மற்றும் முறைப்பாட்டாளர் அப்துல் மஜீத் அப்துர் ரஊப் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை இடம் பெற்றது.
இதன் போது 12.07.1990 அன்று காத்தான்குடிக்கு சென்ற புனித ஹஜ் கடமையை முடித்துக் கொண்டு வீடு திரும்பியோர் மற்றும் காத்தான்குடி மற்றும் ஏனைய கிராமங்களைச் சேர்ந்த. பொது மக்களின் உறவினர்கள் தமது உறவினர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஆவணங்களுடன் வந்து தகவல்களை வழங்கினர்.
இந்த சம்பவத்தில் கடத்தி காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு குருக்கள் மடத்தில் புதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் மனித புதை குழியை தோண்டி இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்து காத்தான்குடியைச் சேர்ந்த அப்துல் மஜீத் அப்துர் ரஊப் என்பவரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் கடந்த 25ம் திகதி களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி குருக்கள் மடம் மனித புதைகுழியை தோண்டுவதற்கு கட்டளை பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.










