உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

நாடாளுமன்றத்தில் முறையற்ற வார்த்தைகள் பயன்படுத்திய – எம்.பிக்கள் மீது விசாரணை.!!!

நாடாளுமன்ற அமர்வுகளின் போது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையற்ற வார்த்தைகளை பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகத்தால் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நிலையியற் கட்டளை 82.1 இன் கீழ், முறையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்பு கோர வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

மேலும், அத்தகைய வார்த்தைகள் நாடாளுமன்ற ஹன்சார்ட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், நேற்றைய அமர்வுகளின் போது பயன்படுத்தப்பட்ட முறையற்ற மொழி குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகத்திற்கு தான் உத்தரவிட்டுள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709352

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time