உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 17, 2026

Hot News

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

இறக்காமம் பிரதி தவிசாளர் ஆஷிக் – பதவியை இராஜினாமா செய்தார்.!!!

இறக்காமம் பிரதி தவிசாளர் என்.எம்.ஆஷிக் தனது பதவியை இன்று வெள்ளிக்கிழமை அம்பாறை தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் முன்னிலையில் இராஜினமா செய்தார்.

சென்ற வாரம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் MP தலைமையில் கடந்த (15) சனிக்கிழமை ஒலுவிலில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானத்ததன் பிரகாரம் இந்த வாரத்திற்குள் தனது பிரதி தவிசாளர் பதவியை NM.ஆஷிக் இராஜினமா செய்வதாக கட்சியின் உயர்மட்டம் கூடி முடிவு செய்தது.

அதன் பிரகாரம் கட்சிக்கும் தலைமைக்கும் கட்டுப்பட்டு தனது பதவியினை இன்று இராஜினமா செய்துள்ளார்.

பிரதி தவிசாளர் பதவியை என்.எம்.ஆஷிக் முன்கூட்டியே கட்சி வேண்டிக் கொண்டதுக்கு இனங்க தலைவர் மற்றும் செயலாளர் முன்னிலையில் இராஜிமா செய்து கொடுத்திருந்தார்.

அதனையே இன்று இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் எம்.முஸ்மி முன்னிலையில் கையளித்ததை தொடர்த்து தவிசாளர் ஊடாக அம்பாறை தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான SMM. முஷாரப் முதுநபீன், கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு செயலாளர் AC சமால்டீன், கட்சியின் உயர்பீட உறுப்பினர் A.றியாஸ், உறுப்பினர்களான JK கலிலுல் றகுமான் AJ.சாகிர்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 706045

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time