அமெரிக்க விமானிக்கு பதிலாக 10,000 பாலஸ்தீனிய கைதிகள் விடுதலை செய்ய வேண்டும்: ஈரான் அதிரடி நிபந்தனை.!!!
மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கியமான அரசியல் நகர்வாக, ஈரான் தரப்பிலிருந்து அதிரடியான நிபந்தனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் சிறைகளில் மரண தண்டனையை எதிர்கொண்டு வருவதாக கூறப்படும் சுமார் 10,000 பாலஸ்தீனிய கைதிகளை உடனடியாக விடுதலை செய்தால் மட்டுமே, தங்களது கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படும் அமெரிக்க விமானப்படை வீரரை பாதுகாப்பாக ஒப்படைக்கத் தயாராக உள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
அதன்படி, கைதிகள் விடுதலை செய்யப்படும் பட்சத்தில், தற்போது பிடியில் உள்ள அமெரிக்க விமானியை எந்த சேதமும் இன்றி ஒப்படைக்கத் தயார் எனவும் ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், மரண தண்டனை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களின் உயிரைக் காப்பதே இந்த நிபந்தனையின் முக்கிய நோக்கம் எனவும் ஈரான் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, இந்த அறிவிப்பு அமெரிக்காவிற்கு கடுமையான ராஜதந்திர நெருக்கடியை உருவாக்கியுள்ளது. தனது நாட்டு விமானியை மீட்பதா அல்லது தனது முக்கிய கூட்டாளியான இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து கைதிகளை விடுவிக்கச் செய்வதா என்ற சிக்கலான நிலைமைக்கு வாஷிங்டன் முகங்கொடுத்துள்ளதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, ஈரான் முன்வைத்துள்ள இந்த நிபந்தனையை இஸ்ரேல் ஏற்குமா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை. இந்த விவகாரம் சர்வதேச அரசியல் மேடையில் பரவலான விவாதத்தையும் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், வரும் நாட்களில் மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரிக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.