உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

தமிழ்மொழி மூலம் 194 புள்ளிகளுடன் – யாழ் மாணவன் முதலிடம்.!!!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, அகில இலங்கை அளவில் சிங்கள மொழி மூலம் காலி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 198 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளதுடன் தமிழ் மொழி மூலம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 194 மதிப்பெண்களைப் பெற்று அகில இலங்கை அளவில் முதலிடம் பிடித்துள்ளார் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார்.

இந்நிலையில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலமாக முதலிடம் பெற்றுள்ளார்.

அம்பலாங்கொடை ஸ்ரீ தேவானந்தா கல்லூரியின் சந்துனி அமயா சிங்கள மொழி மூலம் முதலிடம் பெற்றுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 51,969 ஆகும், இது 17.11% சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

இது கடந்த ஆண்டைவிட 1.06% அதிகம் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 713887

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time