உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

ஜயந்தியாய – ரிதிதென்ன கிராமங்களை இணைக்கும் பாலம் மற்றும் வீதி அபிவிருத்தி பணிகளை பார்வையிட்டார் – கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்.!!!

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுடைய வேண்டுகோளின் பெயரில், நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஜயந்தியாய – ரிதிதென்ன கிராமங்களை இணைக்கும் வகையில் சுமார் 80 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பாலத்தினை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், இன்று (30) பார்வையிட்டார்.

மேலும், இவ்விரு கிராமங்களையும் நேரடியாக இணைக்கும் புதிய வீதியை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் கலந்துரையாடல் நடைபெற்றது. இதற்கான தேவையான நிதியை பெற்றுத் தருவதோடு, விரைவில் அந்த வேலைகளையும் ஆரம்பிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.

இவ்விஜயத்தில், வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம். தாஹிர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜயந்தியாய இணைப்பாளர் பாறுக், ழபுர்டீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வாகரை பிரதேச சபை உறுப்பினர் ஜே.எம். முனாஸ் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

— ஊடகப்பிரிவு

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709513

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time