“மகிழ்ச்சியான சிறுவர் உலகம்” எனும் தொனிப்பொருளில் – ஆரையம்பதி அல் அக்ஸா வித்தியாலயத்தின் சிறுவர் பேரணியும் கொண்டாட்டமும்.!!!
(ஜே.கே)
இன்று சர்வதேச சிறுவர் தினமாகும். இதனையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வைபவங்கள் இடம்பெற்றன.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரையம்பதி காங்கேயனோடை அல் அக்ஸா மகா வித்தியாலயம் ஏற்பாடு செய்த சிறுவர் தின பேரணியும் கொண்டாட்டமும் ஆரைம்பதியில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.எம்.பாயிஸ் தலைமையில் இடம் பெற்ற சிறுவர் தின கொண்டாட்டங்களின் போது பாடசாலை முன்றலிலிருந்து ஆரம்பமான மகிழ்ச்சியான சிறுவர் உலகம் எனும் தொனிப்பொருளிலான சிறுவர் பேரணி பாடசாலை முன்றலில் இருந்து ஆரம்பமாகி ஆரையம்பதி பிரதான வீதி வழியாக ஆரையம்பதி விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது.
விளையாட்டு மைதானத்தில் சிறுவர்கள் மகிழ்ச்சியான முறையில் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டனர் பாடசாலை ஆசிரியர்கள் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.




