உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

LTTEயினரால் கடத்தி படுகொலை செய்யப்பட்ட; குருக்கள் மடத்திலுள்ள மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தை நேரில் செய்று பார்வையிட்ட – நீதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள்.!!!

(ஜே.கே)

1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் விடுதலைப் புலிகளினால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு விசாணை இன்று (11) வியாழக்கிழமை களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது உரிய நபர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்தை இன்றய தினம் நீதிபதி ஜே.பீ.ஏ.ரஞ்சித்குமார் முன்னிலையில் தொல்பொருள் திணக்களத்தினர், சட்டத்தரணிகள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர், பிரதேச சபைத் தவிசாளர், பொலிசார், காணாமல் ஆக்கப்பட்ட அலுவலக அதிகரிகள், சட்ட வைத்திய நிபுணர்கள், தடயவியல் பொலிசார், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், உள்ளிட்ட பலரும் பார்வையிட்டனர்.

இதன்போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பமத்தினரும் உரிய இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

சம்பவ இடத்தில் புதைக்கப்பட்ட மனித எச்சங்களை தோண்டி எடுக்குமாறு ஏற்கனவே களுவாசிகுடி நீதவான் நீதிமன்றம உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் இன்றய தினம் நீதிபதி தலைமையிலான உயர் அதிகாரிகள் உரிய இடத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

குருக்கள்மடம் கடற்கரைப் பகுதியை அண்மித்ததாக உள்ள இடம் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்கு பாதுகாப்பு வலயம் அமைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709488

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time