ஏறாவூர் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு; ஜே.வி.பி. பொதுச் செயலாளர் தில்வின் சில்வா விஜயம்.!!!
(ஏறாவூர் செய்தியாளர்)
மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் தோழர் தில்வின் சில்வா, நேற்று (25) ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு (ESSCA) விஜயமொன்றை மேற்கொண்டார்.
புற்றுநோயாளர்களுக்கு மிக முக்கியமான மருத்துவ மற்றும் சமூக நலச் சேவைகளை வழங்கி வரும் இந்நிலையத்தின் செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்ட அவர், நிலையத்தின் நிர்வாகத்துடன் எதிர்கால சமூக நலத் திட்டங்கள் குறித்து பயனுள்ள கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இவ் நிகழ்வின்போது, தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச செயலகங்களுக்கான அபிவிருத்தி குழுத் தலைவருமான தோழர் கந்தசாமி பிரபு, தேசிய மக்கள் சக்தியின் ஏறாவூர் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், கல்குடா நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் முரளீஸ்வரன், தொழிலதிபர் அமீர், வைத்திய நிபுணர்கள் மற்றும் நிலையத்தின் செயற்பாட்டு குழு நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
விஜயத்தின் போது புற்றுநோயாளர்களின் நலனுக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விரிவான கலந்துரையாடலும் நடைபெற்றது.


