உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

August 12, 2025

Hot News

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய; பொலிஸ் உத்தியோகத்தர்களின் – அணிவகுப்பு மரியாதை.!!!

(பாறுக் ஷிஹான்)

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2025ம் ஆண்டிற்கான அரையாண்டு அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை இன்று சனிக்கிழமை (9) கல்முனை உவெஸ்லி பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றதுங.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் பங்குபற்றலுடன் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து பொலிஸ் பிரிவு வாகனங்களின் பேரணி ஆரம்பமானது .மேலும் காலை முதல் மாலை வரை பொலிசாரால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் சேவைப்பிரிவு நிலையங்கள், சுற்றுச்சூழல் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட அறைகள் என்பவற்றைப் பார்வையிட்டதுடன், பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்களையும் பரிசோதனை மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் சவளக்கடை, பெரியநீலாவணை, சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொலிஸாரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related News

Total Websites Views

Total Views: 310897

Search

விளம்பரங்கள்