காத்தான்குடி மத்திய கல்லூரியின்: உள்ளக வீதி அபிவிருத்தி வேலைத் திட்டம்; தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் – 35 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பித்து வைப்பு.!!!
(ஜே.கே)
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் கிழக்கில் பாரிய அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 35 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கிழக்கிலங்கையின் பிரபல பாடசாலையான காத்தான்குடி மத்திய கல்லூரியில் பாடசாலையின் உள்ளக வீதி அபிவிருத்தி வேலைத் திட்டம் இன்று (09) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்த அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் உள்ளக வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
பாடசாலை அதிபர் நிஹால் அஹமட் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மெளஜூத், கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்பாளர் யூ..கே.அப்துல்லாஹ், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின்
மாவட்ட நிறைவேற்றுப் பணிப்பாளர் பொறியியலாளர் லிங்கேஸ்வரன்
சுற்றாடல் அமைச்சின் இணைப்பாளர் எம்பீ..எம்.பிர்தெளஸ் நழீமி, தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடி அமைப்பாளர் எம்.எஸ்.எம்.நசீர் உட்பட தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச முக்கியஸ்தர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் மூலம் பல்லாயிரம் மாணவர்கள் நன்மை பெறவுள்ளனர்.