உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

August 12, 2025

Hot News

நிகழ் நிலை மூலம் பிரதேச செயலாளரை சந்திக்கும் செயலி; காத்தான்குடி பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைப்பு.!!!

(ஜே.கே)

அரசாங்கத்தின் பணிகளை மக்கள் மத்தியில் இலகுபடுத்தும் நோக்குடன் கிழக்கு மாகாணத்தின் முதலாவது நிகழ்நிலை ஆன்லைன் மூலம் பிரதேச செயலாளரை சந்திக்கும் செயலி காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இன்று (11) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

http://kattankudyds.org

காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மவுஜூத் உத்தியோக பூர்வமாக இந்த செயலியை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைப்பத்தின் போது ஆரம்பித்து வைத்தார் .

உதவி பிரதேச செயலாளர் உட்பட பிரதேச செயலக உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என பலரும் சமூகமளித்திருந்தனர்.

பிரதேச செயலாளரை பொதுமக்கள் சந்திப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அல்லது தாமதங்களை தவிர்ப்பதற்காக குறித்த நிகழ்நிலை செயலி மூலம் பிரதேச செயலாளரை தாம் விரும்பிய நேரத்துக்கு சந்திக்க முடியும். அதன் மூலம் பிரதேச செயலகங்களுக்கூடாக மக்கள் அதிக நன்மைகளை பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக குறித்த செயலியை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் உரையாற்றிய பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மவ்ஜூத் குறிப்பிட்டார்.

 

Related News

Total Websites Views

Total Views: 311010

Search

விளம்பரங்கள்