உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா மகளிர் அறபுக் கல்லூரியில்: 2025 சர்வதேச அரபு மொழி தின போட்டிகள்.!!!

சர்வதேச அறபு மொழி தினத்தை முன்னிட்டு காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரியில் சர்வதேச அறபு மொழி தின போட்டிகள் நேற்று (05) கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது அறபுப் பேச்சு, அறபு கஸீதா, அறபு எழுத்தணி, தமிழ்ப் பேச்சு மற்றும் அறபு உரையாடல் உள்ளிட்ட இன்னும் பல போட்டிகள் இடம்பெற்றன.

இப்போட்டி நிகழ்ச்சிகளின் பிரதான நடுவர்களாக: வாழைச்சேனை மர்க்கஸ் அந்நூர் அறபுக்கல்லூரி முதல்வர் கலாநிதி அஷ்ஷெய்க். எம்.பி.எம். இஸ்மாயீல் மதனி, சவலக்கடை தாருல் ஹிக்மா அறபுக்கல்லூரியின் முதல்வர் அஷ்ஷெய்க். ஏ.சி. தஸ்தீக் மதனி, ஏறாவூர் மஃஹதுல் ஹைறாத் அறபுக்கல்லூரியின் முதல்வர் அஷ்ஷெய்க். ஜே.எம். ஸியாத் மதனி, புதிய காத்தான்குடி நூறாணிய்யா மகளிர் அறபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க். எம்.எஸ்.எம். முபாறக் றியாழி, காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க். ஏ.எல். றிஸ்வி பலாஹி, காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரியின் அல்குர்ஆன் மனனப்பிரிவு பகுதித்தலைவர் அஷ்ஷெய்க். ஏ.ஜே. ஜவாஹிர் மதனி, காத்தான்குடி இஸ்லாமிய முன்மாதிரி பாடசாலை பெண்கள் பிரிவு அதிபர் அல்ஹாஜ். எம்.எச்.ஏ.எம். இஸ்மாயீல், காத்தான்குடி சித்தீக்கிய்யா மகளிர் அறபுக்கல்லூரியின் உப அதிபர் மௌலவி. ஏ. அப்துல் அஸீஸ் பலாஹி மற்றும் காத்தான்குடி பிஸ்மி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மௌலவி. எம்.பி.எம். பாஹிம் பலாஹி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகள் கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவுகளாக இடம்பெற்றதுடன், மாணவிகள் தமது திறமைகளை சிறந்த முறையில் வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709414

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time