காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலய மாணவி– தேசிய மட்டத்திற்கு தெரிவு.!!!
காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தின் தரம் 7 இல் கல்வி கற்கும் மாணவி எம்.ஜே. ஸீனத் லிஃப்ரா, இவ்வாண்டு நடைபெற்ற ஆங்கில தினப் போட்டித் தொடரில் Hand Writing – Print நிகழ்வில் கோட்டம் மற்றும் வலயம் மட்டங்களில் முதலாம் இடத்தினையும், மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நடைபெற்ற மாகாண மட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர், ஆங்கில தினப் போட்டியில் பாடசாலைக்கு கிடைத்த மாகாண மட்ட வெற்றி என்பதுடன், தேசிய மட்டத் தெரிவும் என்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
இச் சிறப்புச் சாதனையைப் பெற மாணவியரம், பயிற்சி வழங்கி தயார்படுத்திய ஆசிரியைகளான திருமதி தஸ்னீமா லரீப், திருமதி நஸூஹா ஹசீப், மற்றும் திருமதி ஸஃப்ரா ருல்ஃபான் ஆகியோருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்படுகின்றன.
தேசியப் போட்டியிலும் வெற்றி பெற்று, பாடசாலைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு மற்றும் பழைய மாணவர் சங்கம் சார்பாக வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

