காத்தான்குடி நகரசபையின் கழிவகற்றல் பணிகளுக்கு; 4 மில்லியன் ரூபாய் – தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் ஒதுக்கீடு.!!!
காத்தான்குடி நகரசபையின் கழிவகற்றல் பணிகளுக்காக Tractor ஒன்றினைக் கொள்வனவு செய்வதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் 4 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காத்தான்குடிப் பிரதேசத்தில் சேரும் கழிவுகளை முறையாகவும், கிரமமாகவும் சேகரிப்பதில் போதியளவு வாகணவசதி இன்மை காணப்படுவதாக காத்தான்குடி நகரசபையின் முன்னாள் செயலாளர் றிப்கா ஷபீன் அவர்கள் காத்தான்குடி தேசியமக்கள் சக்தியின் அமைப்பாளர்களிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் கிழக்கு மாகாண சபையினால் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாகணத்தினைக் கொள்வனவு செய்வதற்காக நகரசபை உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.ஹாதி நியமிக்கப்பட்டுள்ளார்.