சிவாநந்தா வித்தியாலய – உயர்தர கணித, விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கு; புதிய கல்வி செயற்திட்டம் ஆரம்பம்.!!!
2026 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்காக கணித மற்றும் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களில், பெற்றோரின் அனுமதியுடன் 13 மாணவர்கள் விடுதியில் தங்கியவாறு கல்வி கற்கும் புதிய கல்வி செயல்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த செயல்திட்டமானது பாடசாலையின் கணித மற்றும் விஞ்ஞான பிரிவு தலைவர் திரு. சுகந்தன் ஆசிரியர் அவர்களின் முயற்சியால், சுவாமி நீலமாதவானந்த ஜீ மஹராஜ் அவர்களினால் நேற்று (02) விடுதியில் தொடங்கிவைக்கப்பட்டது.
இந்த ஆரம்ப நிகழ்வில் பிரதியதிபர்கள் திரு. குலேந்திரகுமார், திருமதி யாழினி தனுஷன், உதவி அதிபர் திரு. உருத்திரகரன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர், முன்னாள் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், 1990ம் ஆண்டு உயர்தர வகுப்பு மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக, ரூ. 575,000 பெறுமதியான Smart Board ஒன்றை 1990ம் ஆண்டு உயர்தர வகுப்பு மாணவர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த கல்வி முயற்சி, முழுமையாக அதிபரின் தலைமையிலும், திரு. சுகந்தன் ஆசிரியரின் அர்ப்பணிப்பாலும், பெற்றோர்களின் முழுமையான ஒத்துழைப்பாலும் இடம்பெறுகிறது.



