உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவராக; விடிவெள்ளி பிரதம ஆசிரியர் எம்.பி.எம். பைரூஸ் தெரிவு.!!!

(எம்.ஐ.அப்துல் நஸார்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவராக இரகசிய வாக்கெடுப்பின் மூலம் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம். பைரூஸ் தொிவு செய்யப்பட்டுள்ளார்.

மீடியா போரத்தின் தலை­வரும் சிரேஷ்ட ஊட­க­வி­ய­லா­ள­ரு­மான கலாபூ­ஷணம் என். எம் அமீன் தலைமையில் இன்று (27) கொழும்பு -10, டி. ஆர். விஜேவர்த்தன மாவத்தையிலுள்ள தபாலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போரத்தின்
வருடாந்தப் பொதுக் கூட்டம் மற்றும் 30 ஆவது ஆண்டு நிறைவு விழாவின்போதே இத் தொிவு இடம்பெற்றது.

தலைவர் பதவிக்காக விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம். பைரூஸ், ரூபவாஹினி தமிழ் செய்தி வாசிப்பாளர் அறிவிப்பாளர் இர்ஷாத் ஏ காதர் ஆகிய இரு ஊடகவியலாளர்கள் போட்டியிட்டனர்.

ஏலவே தலைவர் பதவிக்காக போட்டியிடுவதாக அறிவித்தருந்த விடியல் ஊடகத்தின் பணிப்பாளர் றிப்தி அலி, ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.றிபாஸ்
ஆகிய இருவரும் இறுதி நேரத்தில போட்டியிலிருந்து விலகிக் கொண்டனர்.

வாக்களிப்பதற்காக இலங்கையின் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பினர்கள் வருகை தந்து வாக்களித்திருந்தனர்.

தலைவர் தெரிவுக்காக போட்டியிட்டவர்கள் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களாவர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709436

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time