கோறளைப்பற்று மத்தி புதிய பிரதேச செயலாளராக பெண்.!!!
(நமது செய்தியாளர்)
மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளராக எம்.ஏ.சி.றமீஸா இன்று (10) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
2017.11.01ம் திகதியிலிருந்து கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய எஸ்.எச்.எம்.முஸம்மில் 2025.02.03ம் திகதி ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச்சென்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே றமீஸா பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏறாவூரை பிறப்பிடமாகக் கொண்ட இவர் 2012/01/02ம் திகதி இலங்கை நிர்வாக சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து காத்தான்குடி பிரதேச செயலகத்திலும், ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திலும், உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றியிருந்தார்.
2019/07/29ம் திகதியிலிருந்து வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திலும் உதவிப் பிரதேச செயலாளராகக் கடமையாற்றி தமது செயலக பிரிவு மக்களுக்கு சேவைகளை வழங்கிவந்த நிலையில் பதவி உயர்வு பெற்று இன்று 2025/02/10ம் திகதி புதிய பிரதேச செயலாளராக தமது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.