உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 17, 2026

Hot News

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

வெள்ளத்தால் சேதமான நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பராமரிப்பு – கடற்படை சுழியோடிகள் முன்னணி உதவி.!!!

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம் வழங்குவதற்காக கடற்படை நாடு முழுவதும் ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது

இதன் கீழ், ஊவா மாகாண நீர் வழங்கல் வாரியத்தின் கீழ் உள்ள மஹியங்கனை நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மத்திய மாகாண நீர் வழங்கல் வாரியத்தின் கீழுள்ள பேராதெனிய கட்டம்பே நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றில் வெள்ளத்தால் சேதமடைந்து செயலிழந்த நீர் பம்புகளை பழுதுபார்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் கடற்படை சுழியோடி உதவியை வழங்கியது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் வேண்டுகோளுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட இந்த சுழியோடி உதவி நடவடிக்கையில் ஐந்து (05) கடற்படை வீரர்களைக் கொண்ட இரண்டு சுழியோடி குழுக்கள் பங்கேற்றன.

அதன்படி, கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக நீருக்கடியில் நீர் பம்பின் செயல்பாட்டிற்கு இடையூறாக இருந்த மஹியங்கனை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குவிந்திருந்த சேறு மற்றும் பிற குப்பைகள் மிகுந்த முயற்சியுடன் அகற்றப்பட்டு அதன் அசல் நிலைக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 706019

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time