உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

July 6, 2025

Hot News

மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்யாலயத்தின் அபிவிருத்தி தேவைகளை கண்டறிய; கிழக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளர் விஜயம்.!!!

கிழக்கு மாகாண கௌரவ ஆளுநரின் இணைப்புச் செயலாளர் UH அப்துல்லா அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாநகர சபை மஞ்சந்தொடுவாய் வட்டார கௌரவ உறுப்பினர் ACM லத்தீப் இப்பிரதேச அரசியல் சமூக செயற்பாட்டாளர் ஆதம் எஹ்யா மஞ்சந்தொடுவாய் ஹிழுரியா ஜும்ஆ பள்ளிவாயல் தலைவர் அபுல் ஹசன் அத்துடன் பிரதேச தேசிய மக்கள் சக்தி செயற்பாட்டாளர்கள் கொண்ட குழுவினர் வெள்ளிக்கிழமை (04) மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்யாலயத்தின் அபிவிருத்தி தேவைகளை இனம் காண்பதற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்

இதன் போது பாடசாலையின் அதிபர் ALM.றிபாத் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் MM.மன்சூர் அத்துடன் ஏனைய பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர்

கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட பாடசாலைக்கு தேவையான புதிய வகுப்பறை கட்டடத் தொகுதி ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் சுற்றும் மதில் நிருமானம் மற்றும் ஏனைய தேவைகளில் ஸ்மார்ட் வகுப்பறை வசதியினை விரைவில் செய்து தருவதாகவும் ஏனைய தேவைகளை எதிர்காலத்தில் கட்டங்கட்டமாக நிறைவேற்றி தருவதாக கௌரவ ஆளுநரின் இணைப்புச் செயலாளர் அவர்களினால் உறுதியளிக்கப்பட்டது.

எதிர்வரும் நாட்களில் மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் உள்ள மற்றும் இரு பாடசாலைகளான முகைதீன் வித்தியாலயம் ஹுஸைனியா வித்தியாலயம் என்பவற்றிற்கும் இவ்வாறான விஜயத்தினை ஆளும் தேசிய மக்கள் சக்தி குழுவினர் மேற்கொள்ள உள்ளனர்

பின் தங்கிய இப் பிரதேசத்தின் கல்வி மேம்பாட்டுக்கான பணிகளை ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசின் ஊடாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்பதையும் இக்குழுவினர் தெரிவித்தனர்.

Related News

Total Websites Views

Total Views: 241988

Search

விளம்பரங்கள்