உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

ஹஜ் விசா பெற கட்டாயமாக அரசு மருத்துவச் சான்றிதழ் – கடுமையான நோய்களுக்கு சவுதி புதிய விதிமுறைகள்.!!!

(அஷ்ரப் ஏ சமத் )

இம் முறை இலங்கையிலிருந்து ஹஜ்ஜூக்கு செல்ல உள்ளவர்கள் கட்டாயமாக மருத்துவச் சான்றிதழை சமர்ப்பித்தல் வேண்டும். அதன் பின்பே சவுதி அரசாங்கம் விசா வழங்குவதாகவும் சவுதி அரசின் ஹஜ் பிரிவினர் தங்களுக்கு அறிவித்துள்ளனர் மிகப் பாரதுரமான ஆறு நோய்களுக்கு அரச மருத்துவச் சான்றிதழை பெற்றுக் கெள்ளமாறும் அறிவுறுத்தியுள்ளதாக ஹஜ் கமிட்டியின் தலைவர் றியாஸ் மிஹ்லார் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து ஹஜ் செல்பவர்களது மருத்துவச் சான்றிதழ்களை கண்கானிப்பதற்காக எமது கமிட்டியினால் வைத்திய அதிகாரி சிஹான் என்பவரை நியமித்துள்ளோம். நாடு முழுவதிலும் உள்ள அரச வைத்தியசாலைகளிலேயே ஹஜ் செல்ல உள்ளவர்கள் இம் முறை அரச மருத்துவச் சான்றிதழ்களை பெறல் வேண்டும் அச் சான்றிதழ்களை எமது வைத்திய அதிகாரியின் ஊடாக பரிசிலனை செய்யப்படும். சவுதி அரசின் பின்வரும் கடுமையான நோய்களான புற்றுநோய், இதய துடிப்பு, சிறுநீரக நோய் மற்றும் கடுமையான சர்க்கரை வியாதி ,நான்கு அல்லது 5 மாத கர்ப்பினி போன்ற நோய்களுக்கான மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்குமாறு வேண்டியுள்ளது.

பொய் மருத்துவச் சான்றிதழ்களை சமர்ப்பித்திருந்தால் அவர்கள் சவுதியில் பரிசீலித்து மீள அதே விமானத்தில் அனுப்பிவிடுவார்கள். அவர்களுக்கு ஹஜ் செய்ய முடியாமல் போகிவிடும் . இம்முறை சவுதி அரேபியா ஹஜ் விடயத்தில் மிகவும் பல கடினமான நிபந்தனைகளை விதித்து்ளளதாகவும் ஹஜ் கமிட்டியின் தலைவர் றியாஸ் மிப்லார் தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709296

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time