உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

மட்டக்களப்பு நகரில் பாரிய சுற்றிவளைப்பு; 76 உணவகங்களில் திடீர் தேடுதல் – 27 வர்த்தக நிலையங்கள் மீது வழக்குத் தாக்கல்.!!!

(ஜே.கே)

மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகரில் சுகாதார அதிகாரிகள் நேற்றிரவு (16) மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போது, மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை தயாரித்த மற்றும் விற்பனை செய்த 27 வர்த்தக நிலையங்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ் முரளீஸ்வரன் தெரிவித்தார்.

மாவட்டத்தின் ஆறு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்த சுகாதார வைத்திய அதிகாரிகள் தலைமையில் 52 பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகள் வைத்தியர்கள் இணைந்து குறித்த பாரிய சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, பட்டிப்பளை, கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்த வைத்தியர்கள் தலைமையில் ஐந்து பிரிவுகளாக மேற்படி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது மனிதபாவனைக்குதவாத உணவுப் பொருட்களை தயாரித்த மற்றும் விற்பனை செய்த 72 உணவகங்கள் சோதனையிடப்பட்டன. இதில் 27 வர்த்தக நிலையங்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதவர்கள் தெரிவித்தனர்.

சுற்றிவளைப்பின் போது பெருமளவு மனித பாவனைக்குதவாத நுகர்விற்கு பொருத்தமற்ற சமைத்த மற்றும் பொதியிடப்பட்ட உணவுப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதுடன் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவைகள் அழிக்கப்படவுள்ளதாகவும் சுகாதார துறையினர் மேலும் தெரிவித்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709473

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time