பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எஸ். சிறீதரன் உரையை கண்டிக்கின்றோம்; மாநகர பிரதி மேயர் உவைஸ்.!!!
இலங்கை முஸ்லிம்கள் திட்டவட்டமாக ஒரு தேசிய இனம் எங்களுக்கு யாராலும் மறுக்க முடியாத தேசியம் உண்டு. இதனை மறுப்பவர்களை நேர்மையாகவும் கடுமையாகவும் கண்டிக்கின்றோம்.
இலங்கை முஸ்லிம்கள் தேசிய இனம், அவர்கள் ஒரு தேசியம். இவ்விரு விடயங்களையும் நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுக்க தயாரில்லை. தேசிய இனம், தேசியம் என்பது முஸ்லிம்களின் பிறப்புரிமை.
இதனை யார் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்களோ அவர்களை முஸ்லிம் சமூகம் நிராகரிக்கின்றோம். இலங்கையில் இனப்பிரச்சினைக்கு 75 ஆண்டுகள் வயது சென்று விட்டது.
எல்லா சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகள் எட்டப்பட வேண்டும். காத்திரமான முன்னெடுப்புக்கள், எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஆலோசனைகள், ஆக்கப்பூர்வமான விட்டுக்கொடுப்புக்கள் அவசியம் என்பதை புரிந்து செயல்பட முன்வர வேண்டும்.
முஸ்லிம்களுக்கு உரித்தான உரிமைகள், அபிலாஷைகள், தேவைகள் புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பில் சரியாக உள்வாங்கப்பட வேண்டும். அதனை மட்டும்தான் முஸ்லிம்கள் சமூகம் ஏற்றுக்கொள்வார்கள்.
அக்கரைப்பற்று
மாநகர சபை பிரதி மேயர்
யு எல் உவைஸ்