காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்கள்; கல்வி மற்றும் ஏனைய துறைகளில் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் – சிரேஷ்ட ஊடகவியலாளர் நூர்தீன்.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
அண்மையில் வெளியாகிய தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்களின் பிள்ளைகளை கெளரவிக்கும் நிகழ்வு, மீடியா போரத்தின் இணைப்பாளர் பஹத் ஜுனைட் இல்லத்தில் இன்று (10) இடம்பெற்றது.
காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம். நூர்தீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்;
அவர் தனதுரையில் எமது மீடியா போரத்தின் உறுப்பினர்கள் அல்லது அவர்களின் பிள்ளைகள் கல்வி மற்றும் ஏனைய செயற்பாடுகளில் சிறந்த அடைவுகளைப் பெறுகின்ற போது அவர்களை ஊக்கப்படுத்த வேண்டியது அவசியமாகும், இதனடிப்படையிலேயே இன்றைய கெளரவிப்பு நிகழ்வு இடம்பெறுகின்றது, அதுபோல எமது போரத்தின் உறுப்பினர்களும் கல்வியில் முன்னேற்றமடைய வேண்டும், அத்தோடு தங்களது திறமைகளையும், திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், காத்தான்குடி மீடியா போரத்தின் ஆயுட்காலத் தலைவர் மெளலவி எம்.எம். முஸ்தபா பலாஹி, முன்னாள் தலைவர் டீன் பைரூஸ் ஆகியோரும் உரையாற்றினர்.
இந்நிகழ்வில் காத்தான்குடி மீடியா போரத்தின் இணைப்பாளர் பஹத் ஜூனைட், போரத்தின் உறுப்பினர்களான அஸீம், பாரிஸ் அமானுல்லாஹ் ஆகியோரின் பிள்ளைகளான மொஹம்மட் பஹத் அப்துல்லாஹ் அப்துல் மலீக்,
மொஹம்மட் அஸீம் அர்ஹம் அஹமட், பாரிஸ் பாத்திமா ஸபா ஆகியோருக்கு நினைவுச் சின்னங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் காத்தான்குடி மீடியா போரத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பொதுச்சபை உறுப்பினர்கள், பெற்றோர்கள், குடும்பத்யினர் என பலரும் கலந்துகொண்டனர்.



















