மட்டக்களப்பில் மினி சூறாவளி தாக்கம் – ஆரையம்பதியில் மரங்கள் முறிந்து மின்சாரம் துண்டிப்பு.!!!
( காத்தான்குடி செய்தியாளர்)
மட்டக்களப்பு – ஆரையம்பதிப் பகுதியில் இன்று (24) வீசிய மினி சூறாவளியால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
பலத்த காற்றின் தாக்கத்தால் மரங்கள் முறிந்து விழுந்ததுடன், சில இடங்களில் வீடுகள் மற்றும் சொத்துகளுக்கும் சிறிய அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும், முறிந்து விழுந்த மரங்கள் மின் கம்பிகள் மற்றும் மின் விநியோக கட்டமைப்புகளில் விழுந்ததன் காரணமாக, ஆரையம்பதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் மினி சூறாவளியானது, வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்திருந்த பொதுவான வானிலை எச்சரிக்கைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அவதானத்துடன் நடந்து கொள்ளவும், பாதுகாப்பாக இருக்கவும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மின் விநியோகத்தை மீளமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.











