உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

இலங்கை – ஓமான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத் தலைவராக: அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவு.!!!

இலங்கை – ஓமான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்கள் பத்தாவது பாராளுமன்றத்திற்காக தெரிவுசெய்யப்பட்டார்.

சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இச் சங்கத்தை மீளஸ்தாபிக்கும் நோக்கில் நடைபெற்ற கூட்டம் நேற்று (13) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் ஓமான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் அஹமது அலி சையிட் அல்ராஷிதி அவர்கள் கௌரவ அதிதியாகப் பங்கேற்றார்.

கூட்டத்தில் பல அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா அவர்கள் நட்புறவுச் சங்கத்தின் செயலாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர் சத்துரி கங்கானி அவர்கள் சங்கத்தின் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

1981 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையில் பரஸ்பர மரியாதை மற்றும் பொதுநலனை அடிப்படையாகக் கொண்ட நீண்டகால இருதரப்பு உறவு நிலவி வருவதை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். ஓமானில் உள்ள இலங்கை சமூகத்தின் பங்களிப்பும் இந்நிகழ்வின் போது சுட்டிக்காட்டப்பட்டதுடன், இரு நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உறவு வலுப்படுத்துதலிற்கும் அவர்கள் செய்துவரும் பங்களிப்புகள் பாராட்டப்பட்டன.

மேலும், சுற்றுலா, வர்த்தகம், தொழில், கல்வி உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் மேம்பட்ட ஒத்துழைப்பை மேம்படுத்தும் வாய்ப்புகள் குறித்தும் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. மீளஸ்தாபிக்கப்பட்ட நட்புறவுச் சங்கம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை ஆழப்படுத்தவும், பரஸ்பர நலனுக்கான திட்டங்களை முன்னெடுக்கவும் ஒரு பயனுள்ள தளமாக இருக்கும் என இரு தரப்பும் நம்பிக்கைத் தெரிவித்தன.

பாராளுமன்றத்திற்கான விஜயத்தின் போது ஓமான் தூதுவர் அஹமது அலி சையிட் அல்ராஷிதி அவர்கள் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார். இவ்வேளை பாராளுமன்ற மட்டத்தில் ஒத்துழைப்பை விரிவாக்குதல் மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல் குறித்து கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709345

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time