கம்பளை பாதிப்பு இடங்களில் சுத்தம் செய்வதை முன்னெடுக்கும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி.!!!
சமீபத்தில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் கனமழையால் கம்பளை பிரதேசம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை நிவர்த்தி செய்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் நேரில் விஜயம் செய்தார்.
கள நிலைமைகளை நேரடியாகக் கண்காணித்த அவர், காத்தான்குடி மற்றும் ஏறாவூர் நகர சபை உறுப்பினர்களை ஒருங்கிணைத்து சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரமும், பாதுகாப்பும் முதன்மையாகக் கருதி, சேதமடைந்த பகுதிகளை சீரமைப்பதில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு, அப்பகுதி மக்களிடையே பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் உருவாக்கியுள்ளது.
நிலைமையை உடனடியாக கையாள வேண்டிய அவசரத் தேவையை உணர்ந்து, களத்தில் செயல்படும் அவரது செயற்பாடு, சமூகத்திற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது.
பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் சாலைகள், வீடுகள், பொது வசதிகள் உள்ளிட்டவை சேதமடைந்த நிலையில், அவற்றை விரைவாக சீரமைக்கும் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


