காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் புதிய விசேட பொது வைத்திய நிபுணராக; நுசைர் நியமனம்.!!!
காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு நேற்று (01) தொடக்கம் விசேட வைத்திய நிபுணராக காத்தான்குடியைச் சேர்ந்த பொது வைத்திய நிபுணர் டாக்டர் எம்.எஸ். முகம்மது நுசைர் (MBBS, MD) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீண்ட காலமாக எமதூரில் மக்கள் சேவையில் ஈடுபட்டு வந்த இவர், பொது மருத்துவ நிபுணராக தனது வெளிநாட்டுப் பயிற்சியை ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில் உள்ள Fiona Stanley Hospital மற்றும் Fremantle Hospital ஆகியவற்றில் நிறைவு செய்து, மீண்டும் நாட்டுக்கு திரும்பியுள்ளார்.
மேலும், தனது ஊரான காத்தான்குடியில் பணியாற்ற வேண்டும் என்ற தனிப்பட்ட விருப்பத்தை சுகாதார அமைச்சுக்கு முன் வைத்து, காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு விசேட பொது வைத்திய நிபுணராக இணைந்துள்ளார்.
ஓய்வு பெற்ற அதிபரும், ஓய்வூதியர் சங்க ஸ்தாபகருமான ஏ.எல்.எம். சித்தீக் அவர்களின் மூத்த புதல்வராகிய டாக்டர் நுசைர் அவர்களை எம்மக்கள் சார்பாக அன்புடன் வரவேற்று வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும், தனது வைத்தியச் சேவையுடன் சமூகப்பணிகளிலும் தன்னை அர்ப்பணித்து செயல்பட்டு வரும் டாக்டர் நுசைர் அவர்களின் சேவை பாராட்டுக்குரியது என்பதும் குறிப்பிடத்தக்கது.