உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

குடும்ப வலுவூட்டல் தேசிய வேலைத்திட்டம் – காத்தான்குடியில் கருத்தரங்கு.!!!

(எம்.ஏ.சீ.எம். ஜெலீஸ்)

குடும்ப வலுவூட்டல் தொடர்பான “உளசமூக நோக்கு” எனும் கருப்பொருளில் காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில், நேற்று (24) புதன்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கருத்தரங்கு நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ். சில்மியா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், குடும்ப அபிவிருத்தி திட்டத்தின் மூலம் வலுவூட்ட அடையாளம் காணப்பட்ட அஸ்வசும மற்றும் சமுர்த்தி பயனாளிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் நிஸா றியாஸ் வளவாளராக கலந்து கொண்டார்.

சமூக அபிவிருத்தி உதவியாளர் எம். அன்சார் நிகழ்வை நெறிப்படுத்தியதோடு. சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ், கருத்திட்ட முகாமையாளர் திருமதி கண்ணன் உள்ளிட்ட பல பயனாளிகள் கலந்து கொண்டனர்.

 

 

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709443

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time