உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பாக புதிய அறிவிப்பு.!!!

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளின் முதலாம் கட்டத்தை மீண்டும் சரிபார்க்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளுக்காக பதிவு செய்த அனைத்து குடும்பங்களும் மற்றும் தனிநபர்களும் இத்தருணத்தில் மீண்டும் விண்ணப்பிக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

விண்ணப்பங்கள் 10 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், இதற்காக இணைய வழி மூலமாகவும் விண்ணப்பிக்க இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக www.eservices.wbb.gov.lk
என்ற இணையதளத்தின் மூலம் நேரடியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

அதேபோல், விண்ணப்பப் படிவங்களை கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திலிருந்து பெற்று, அவற்றை பூர்த்தி செய்து பிரதேச செயலகத்தில் சமர்ப்பிப்பதன் மூலமும் பதிவு செய்யலாம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் தகவல்களுக்கு 1924 என்ற துரித தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

இதனுடன், தேவையான தகவல்களை நலன்புரி சலுகைகள் பிரிவு, பொருளாதார மேம்பாட்டு அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக சமுர்த்தி மேம்பாட்டு அலுவலகம்
மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📅 விண்ணப்ப முடிவு நாள்: நவம்பர் 10
📞 தொடர்பு இலக்கம்: 1924
🌐 இணையதளம்: www.eservices.wbb.gov.lk

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709356

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time