உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

காத்தான்குடி உள்ளிட்ட பத்து பிரதேசங்களுக்கு  – புதிய காதி நீதவான்கள் நியமனம்.!!!

நீண்டகாலமாக வெற்றிடமாக காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நீதவான் பதவிகள் தற்போது நிரப்பப்பட்டுள்ளதாக இலங்கை காதி நீதவான்கள் சம்மேளனத்தின் தலைவர் அல் – ஹாஜ் இப்ஹாம் யஹியா தெரிவித்துள்ளார், இந்த நியமனங்கள் நவம்பர் 3ஆம் திகதி முதல் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, பதுளை, கொழும்பு வடக்கு, காத்தான்குடி, மண்முனைப்பற்று, மாஹோ, மாத்தளை, மாவனல்லை, புத்தளம், சிலாபம், சம்மாந்துறை, பாத்ததும்பறை, உடதலவின்ன, உடுநுவர ஆகிய பிரதேசங்களுக்கான காதி நீதவான்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் இடம்பெற்ற நேர்முகத் தேர்வுகளைத் தொடர்ந்து இப்பதவிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை காத்தான்குடி பிரதேசத்திற்கான காதி நீதவானாக காங்கேயனோடை பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் ஓய்வு பெற்ற அதிபரும், காங்கேயனோடை முகைதீன் ஜும்மா பள்ளிவாயலின் ஆயுட்கால தலைவருமான சமூக சேவையாளர் மௌலவி அல்ஹாஜ் ஏ.சி.எம. றிபாய் அவர்கள், புதிய காழி நீதிபதியாக நியமனம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது.

நீண்ட காலமாக சமூக சேவையிலும், கல்வி மற்றும் மத பணிகளிலும் பெரும் பங்களிப்பு செய்துள்ள றிபாய் அவர்கள், தமது அர்ப்பணிப்பு மற்றும் பணிநிறைவேற்றத்தால் சமூகத்தில் மதிப்புக்குரிய நபராக திகழ்ந்து வருகின்றார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709365

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time