காத்தான்குடி : புனித ரமழானுக்கான ஆயத்தங்களில் ஈடுபடும் பள்ளிவாயல்கள்
எம்.ஐ.அப்துல் நஸாா்
காத்தான்குடி, புதிய காத்தான்குடி மற்றும் அதனையண்டிய பிரதேசங்களில் அமைந்துள்ள பள்ளிவாயல்களில் புனித ரமழானுக்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருகின்றன.
பள்ளிவாயல் எல்லையினுள் வசிப்போருக்கான ரமழான்கால உலருணவுப் பொருட்கள், நோன்பு திறப்பதற்கான கஞ்சி மற்றும் அரபு நாடுகளால் வழங்கப்படும் பேரீத்தம் பழம் (இலங்கைக்கான சவூதி தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்களினால் இலங்கைக்கு 50 தொன் பேரீச்சம்பழங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது) போன்றவற்றை விநியோகிப்பதற்கான குடும்ப அட்டைகள் புதுப்பிப்பு, கஞ்சி தயாாிப்பிற்கான விறகு சேகாிப்பு மற்றும் வா்ணப் பூச்சுக்கான ஏற்பாடுகளும் பள்ளிவாயல் நிருவாகிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தவிர, பெண்களுக்காக பிரத்தியேக ரமழான்கால இரவுநேரத் தொழுகைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
2025 ரமழான் நோன்பு எதிர்வரும் மாா்ச் மாதம் 01 ஆந் திகதியளவில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.