உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

காங்கையன்ஓடை ஊடான பஸ் சேவையை மீண்டும் தொடருங்கள் – பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நளீம்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் நலன் கருதி
காங்கையன்ஓடை ஊடான பஸ் சேவையை மீண்டும் தொடருங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நளீம் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் விடுத்த கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
மட்டக்களப்பு மன்முனை வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம் பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர் வாசுதேவன் அவர்களது ஒழுங்கமைப்பில் திங்கட்கிழமை(27) இடம்பெற்றது .

இதன்போது மட்டக்களப்பு போக்குவரத்துச் சபையால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் நலன் கருதி கொக்கட்டிச்சோலையில் இருந்து காங்கேயனோடை பிரதேசத்தின் ஊடாக சேவையில் ஈடுபட்ட பேருந்து சேவை கடந்த 4 வருடங்களாக காங்கையனோடைக்குள் பயணிப்பது நிறுத்தப்பட்டதால் அப்பகுதி மக்கள் கடுமையான அசௌகரியங்களுக்கு ஆளாகி வருவதுடன் செலவீனம் மற்றும் காலவிரயம் என்பவற்றை எதிர்கொள்கின்றனர்.

மட்டக்களப்பு போக்குவரத்து சாலை அதிகாரிகள் இம்மக்களின் நலனை மனிதாபிமான அடிப்படையில் அணுகி கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டது போன்று காங்கையனோடை பகுதியையும் ஊடறுத்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சென்றடையும் வகையில் பயணிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நளீம் கோரிக்கை விடுத்தார் .

முன்வைக்கப்பட்ட இக் கோரிக்கை காங்கயனோடை மக்களின் நலன்சார் விடயம் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பிரபு அவர்களின் தலைமையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதுடன், இதனை துரிதமாக செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது .

அத்துடன் மன்முனை வடக்கு பிரதேச செயலக எல்லையில் மட்டக்களப்பு மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட மூலமாக முஸ்லிம் மக்கள் செரிந்து வாழும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வீதி விளக்கு சீரமைப்பு , வீதி நிர்மாணம், மற்றும் புனரமைப்பு , மைதான பராமரிப்பு பணிகள் குறித்தும் சில அவசியமான பணிகள் இங்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நளீம் அவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டு தீர்வுக்காக பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(எம்.பஹத் ஜுனைட்)

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 719345

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time