உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

சிறப்பாக இடம்பெற்ற ஜனாஸா நலன்புரி அமைப்பின் முதலாவது மாபெரும் இரத்ததான முகாம்.

(எம்.பஹத் ஜுனைட்)

காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் முதலாவது இரத்ததான முகாம் இன்று ஞாயிற்றுக் கிழமை (26) காலை 08 மணி தொடக்கம் மாலை 04 மணி வரை காத்தான்குடி 01 பதுரிய்யா ஜும்மா பள்ளிவாயலில் நடைபெற்றது .

காத்தான்குடி தள வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பாளர் வைத்தியர் அலிமா ரஹ்மான் மேற்பார்வையில் இடம் பெற்ற இவ் இரத்ததான முகாமில் பெருந்திரலான மக்கள் கலந்து கொண்டு இம் மனிதம் காக்கும் மனிதநேய பணியில் இணைந்து இரத்தத்தை தானம் செய்தனர்.

காத்தான்குடி தள வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் நாளுக்கு நாள் இரத்த தேவைகள் ஏற்படுவதால் அதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் இவ் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க து.

இன்று நடைபெற்ற இரத்ததான முகாமில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட இரத்த கொடையாளர் இரத்த தானம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 719345

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time