159 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு; பாலர் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கி வைப்பு.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
159 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி பொலிஸ் உபதேச குழுவின் ஏற்பாட்டில் இன்று (09) காத்தான்குடி அல்-அக்ஸா பள்ளிவாயலில் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்கும் நிகழ்வு காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம். ரத்னாநயக்க தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சுற்றுச் சூழல் சிவில் பாதுகாப்பு பொறுப்பதிகாரி ஏ.எம்.எம். ஜவாஹிர் மற்றும் அல் அக்ஸா பள்ளிவாயலின் தலைவரும், காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான எம்.ஐ.எம். ஜவாஹிர், பள்ளிவாயல் நிர்வாகிகள், பொலிஸ் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பாலர் பாடசாலை ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் இறுதியில் அப்றார் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு புத்தக பைகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















