உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

தெதுரு ஓயா உட்பட பல நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் திறப்பு – மக்களுக்கு அவசர எச்சரிக்கை.!!!

(கற்பிட்டி – எம்.ஹெச்.எம். சியாஜ்)

கலா ஓயா, தெதுரு ஓயா மற்றும் மீ ஓயாவைச் சுற்றியுள்ள மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென புத்தளம் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) காலை திறக்கப்பட்டுள்ளன. இதன்படி, 2 வான் கதவுகள் – தலா 06 அடி, 4 வான் கதவுகள் – தலா 04 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது. திறக்கப்பட்ட வான் கதவுகளிலிருந்து வினாடிக்கு 19,400 கனஅடி நீர் தெதுரு ஓயாவிற்குள் வெளியேற்றப்படுகிறது.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 5 வான் கதவுகள் – தலா 2 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து வினாடிக்கு 2,244 கனஅடி நீர் கலா ஓயாவிற்கு வெளியேற்றப்படுகிறது.

அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் – தலா 01 அடி திறக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து வினாடிக்கு 590 கனஅடி நீர் கலா ஓயாவிற்கு செல்கிறது.

இகினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் – தலா 01 அடி திறக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து வினாடிக்கு 2,000 கனஅடி நீர் மீ ஓயாவிற்கு வெளியேறுகிறது.

தப்போவ நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் – தலா 2 அடி திறக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து வினாடிக்கு 1,760 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

இந்த நீர்வெளியீடு காரணமாக கீழ்நீர் பிரதேசங்களில் தாழ்வான பகுதிகளில் திடீர் நீர்மட்ட உயர்வு ஏற்படக்கூடியதால், பொதுமக்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 713730

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time