உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

பாம்பு தீண்டி; இரு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் – பரிதாபகரமான முறையில் பலி.!!!

(ஜே.கே)

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திருநீற்றுக்கேணி கிராமத்தில் பாம்பு தீண்டி இரு பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபகரமான முறையில் பலியானதாக தெரிய வருகிறது

இன்று (01) மாலை ஒன்று முப்பது மணி அளவில் குறித்த நபர் தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள குளக்கட்டு வழியாக நடந்து வந்து கொண்டிருந்த போது பாம்பு தீண்டியதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த திருநீற்றுக்கேணி குளக்கட்டு பதுதியில் நீண்ட காலமாக பாம்புகள் இருப்பதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். அதேநேரம் முதலைகளின் தொல்லைகளும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யோகராசா தில்லைவாசகம் என்னும் இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான 38 வயது நபரே இவ்வாறு பலியானதாக அடையாளம் காணப்பட்டுள்ளார் .

மரணமானவரின் சடலம் ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

Total Websites Views

Total Views: 236228

Search

விளம்பரங்கள்