உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

பாகிஸ்தான் –  மோசடி அழைப்பு மையத்தில்; இரு இலங்கையர் கைது.!!!

பாகிஸ்தானின் பைசலாபாத்தில் உள்ள மோசடி அழைப்பு மையம் ஒன்றில் பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய தேடுதலின்போது, இலங்கையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தேடுதலின்போது, மொத்தமாக 149 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு இலங்கையர்களும் அடங்குகின்றனர் என்பதை பாகிஸ்தானியத் தேசிய சைபர் குற்றப் புலனாய்வு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த மோசடி அழைப்பு மையத்தில், அதிக வருமானம் தரும் முதலீட்டு வாய்ப்புகள் என்ற போர்வையில் பெரும்பாலானோர் ஏமாற்றப்பட்டு பெரும் தொகை மோசடி செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 78 பாகிஸ்தானியர்கள், 48 சீனர்கள், எட்டு நைஜீரியர்கள், நான்கு பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள், ஆறு பங்களாதேஷ் பிரஜைகள், இரண்டு மியான்மர் நாட்டவர்கள், ஒரு சிம்பாப்வே நாட்டவர் மற்றும் இரண்டு இலங்கையர்கள் அடங்குகின்றனர்.

Related News

Total Websites Views

Total Views: 259333

Search

விளம்பரங்கள்