உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

மட்டக்களப்பு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயம் முன் பெற்றோர் ஆர்ப்பாட்டம் – கல்விச் செயல்பாடு பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு.!!!

மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் முன்னால் பொற்றோர், பாடசாலை நலன் சார்ந்த அமைப்புக்கள் இணைந்து இன்று (01) காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

அதிபர் ஆசிரியர்களிடையே பிரச்சனை காரணங்களால் மாணவர்களின் கல்வி செயற்பாடு கடந்த சில மாதங்களாக பாதிக்கப்படைந்துள்ளதாகவும் இதனை சம்மந்தப்பட்ட கல்வி திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் அவர்களால் இப்பிரச்சனைக்கு குறிப்பிட்ட காலத்தில் தீர்வு வழங்குவதாக வாக்குறுதி அளித்த போதிலும் அவ்வாக்குறுதி நிறைவேற்றாத நிலையில் இன்று மாணவர்களின் பெற்றோர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை கணித பாடத்திற்கான ஆசிரியரை பதில் ஆசிரியர் இல்லாது இடமாற்றம் செய்துள்ளதால் மாணவர்கள் கணித பாட செயற்பாடுகளில் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாகவும் இங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த இடத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட இணைப்பாளர் திலகநாதன், வருகை தந்து பிரச்சனைகளை ஆராய்ந்ததுடன் இன்றைய தினமே மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்திற்கு சென்று வலய கல்விப் பணிப்பாளர் மற்றும் அதிபர், ஆர்ப்பாட்ட தாரர்களுடன் கலந்துரையாடி மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709510

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time