பாடசாலைக்கு விஜயம் செய்த – பாராளுமன்ற உறுப்பினர் பைசல்.!!!
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் செய்னப் பெண்கள் ஆரம்ப பாடசாலையின் அதிபர் எச்.யூ.எஹியா மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரின் வேண்டுகோளின் பெயரில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் அண்மையில் அங்கு நேரில் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
பாடசாலையில் காணப்படுகின்ற குறை நிறைகள் தொடர்பாக ஆராய்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பைசல், பாடசாலை மாணவர்களுடன் அலவலாவியதோடு அதிபர், ஆசிரியர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருடனும் கலந்துரையாடினார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினரோடு புத்தளம் மாநகர சபை உறுப்பினர் இப்லால் அமீனும் பங்கேற்றிருந்தார்.
அதிபரும், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரும் பாடசாலையின் தேவைப்பாடுகள் தொடர்பாக மகஜர் ஒன்றினையும் இதன் போது பாராளுமன்ற உறுப்பினரிடம் கையளித்தனர்.


