உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 20, 2026

Hot News

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

மத்தல விமான நிலையத்தில் அமெரிக்க போர் விமானங்களுக்கு அனுமதி மறுப்பு – நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அறிவிப்பு.!!!

இலங்கையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மத்தல சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்காவின் இரண்டு போர் விமானங்களை நிறுத்த அனுமதி வழங்க மறுக்கப்பட்டதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், மார்ச் 4 முதல் 8 வரை காலப்பகுதிக்குள், ஜிபூட்டியில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளத்திலிருந்து எட்டு கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளுடன் ஆயுதம் ஏந்திய இரண்டு போர் விமானங்களை மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வர அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்ததாக குறிப்பிட்டார். எனினும், அதற்கு இலங்கை அரசு “இல்லை” எனத் தெளிவான பதிலை வழங்கியதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை தனது முக்கிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்காவுடன் நெருங்கிய உறவை பேணிவருவதுடன், தேயிலை முக்கியமாக இறக்குமதி செய்யும் நாடான ஈரான் உடனும் நல்லுறவை தொடர்ந்து பேணிவருவது குறிப்பிடத்தக்கது.

இந்த முடிவு, நாட்டின் வெளிநாட்டு கொள்கை சமநிலையைப் பேணும் முயற்சியாகக் கருதப்படுகின்றது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 710862

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time