ட்ரோன்களை இயக்க அனுமதி அவசியம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை.!!!
இலங்கையில் முறையான அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குவதை இலங்கை விமானப்படை தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நபர்கள் எவரும் தேவையான அனுமதி பெறாமல் ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உயர் பாதுகாப்பு மண்டலங்களில் அனுமதியின்றி ட்ரோன்களை இயக்கிய சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளதால், தொடர்புடைய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, ட்ரோன் இயக்கத்தில் ஈடுபட விரும்பும் அனைவரும் நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க முன்கூட்டியே உரிய அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற வேண்டியது கட்டாயமாகும் என விமானப்படை வலியுறுத்தியுள்ளது.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதுடன், ட்ரோன் இயக்குபவர்கள் எதிர்நோக்கக்கூடிய சட்ட சிக்கல்கள் மற்றும் சிரமங்களைத் தவிர்ப்பதற்காகவே இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.