பிரதம நீதியரசராக – பிரீத்தி பத்மன் சூரசேனவின் பெயரை அங்கீகரித்த; அரசியலமைப்பு சபை.!!!
இலங்கையின் அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்கும் பரிந்துரையை அரசியலமைப்பு சபை அங்கீகாரம் வழங்கி உள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரீத்தி பத்மன் சூரசேனவின் பெயரை சமீபத்தில் அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பித்தார்.
அதன்படி, இன்று (23) கூடிய அரசியலமைப்பு சபை ஜனாதிபதியின் பரிந்துரையை அங்கீகரித்துள்ளது.
பிரீத்தி பத்மன் சூரசேன நீதிச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக செயற்பட்டுள்ளார். மேலும் பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்த நீதிபதியாகவும், பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பான விசாரணை குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
தற்போதைய பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஓய்வு பெறவுள்ள நிலையில் பிரீத்தி பத்மன் சூரசேனவின் பெயரை அரசியலமைப்பு சபை அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது