உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

பொலிஸ் விசேட சுற்றிவளைப்பில்; 331 பேர் கைது.!!!

நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (27) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பல்வேறு போதைப்பொருட்களுடன் 331 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 98 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 127 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 104 பேரும், ஹஷ் போதைப்பொருளுடன் 02 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 142 கிராம் 122 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 157 கிராம் 823 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 08 கிலோ 454 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 02 கிராம் 410 மில்லிகிராம் ஹஷ் போதைப்பொரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related News

Total Websites Views

Total Views: 119954

Search

விளம்பரங்கள்