பாதாள உலகக் கும்பலுடன் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் முகத்திரை கிழிக்கப்படும் – பாதுகாப்பு அமைச்சர் தகவல்.!!!
செவ்வந்தி மற்றும் பாதாள உலகக் கும்பலுடன் தொடர்புடைய சில அரசியல்வாதிகளின் பெயர்கள் விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாட்டை அச்சுறுத்தும் பாதாள குழுக்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சில தரப்பினருக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
இன்றைய தினம் (18) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, குற்றவாளிகளுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுப்பதால் சிலர் தற்போது பொலிஸாருக்கு எதிராக சதி செய்ய முயற்சிக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தலைமறைவாக உள்ள பாதாள குழு உறுப்பினர்களுக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 80 பேருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, அவர்களை நாட்டிற்கு கொண்டு வர அனைத்து இராஜதந்திர முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தகவல் தெரிவித்தார்.