உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

பூநொச்சிமுனை துறைமுக வீதி நிர்மாண பணி தொடர்பான கள ஆய்வில்; போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர்.!!!

பல தசாப்தங்களாக உரிய முறையில் நிர்மாணிக்கப்படாது குன்றும் குழியுமாக காணப்படும் நாட்டின் பொருளாதார முக்கியத்துவம் மிக்க மீன்பிடி துறைமுகத்தைக் கொண்ட பூநொச்சிமுனை துறைமுக வீதியினை மிக விரைவில் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில் வீதியின் நிர்மாண பணியினை இவ்வாண்டுக்குள் செய்து முடிப்பதற்கான கள ஆய்வுக்காக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் கலாநிதி கபில பெரேரா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் எம். அப்துல்லா, மட்டக்களப்பு தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் திரு.பேர்பியன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று (27)வீதியை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்தனர்.

நிகழ்வில் காத்தான்குடி பிரதேச தேசிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்கள், தேசிய மக்கள் சக்தியின் பூநொச்சிமுனை கிராமமட்ட குழு உறுப்பினர்கள் பிரதேசத்தைச் சேர்ந்த பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இவ் வீதி அமைக்கப்படுவதன் முக்கியத்துவம் தொடர்பாக அல் பரக்கத் கிராமிய கடத்தொழில் அமைப்பின் தலைவர் எஸ்.எச் ஏ. அஸீஸ் அதிகாரிகளுக்கு விளக்கங்களை வழங்கி இருந்தார் .

இவ்வாண்டுக்குள் இவ் வீதி காப்பட் வீதியாக அமைக்கப்படும் என வருகை தந்த அமைச்சு செயலாளரினால் உறுதி அளிக்கப்பட்டது.

இவ்வீதி அபிவிருத்தி செய்யப்படும் பட்சத்தில் பிரதேசத்தின் மீன் பிடித்துறையும் மற்றும் சுற்றுலா தொழிலும் பெரும் நன்மை அடைய முடியும்.

ஆதம் எஹ்யா

செயலாளர்

அல் பரகத் கிராமிய கடல்தொழில் அமைப்பு

Related News

Total Websites Views

Total Views: 119310

Search

விளம்பரங்கள்